பாவ கர்மா புண்ணிய கர்மா ( பகுதி 1 நாமும் நமது உண்மையான மகிழ்ச்சி நிலையும்)
மனிதன் இறைவனை இரண்டு நிலைகளில் பார்க்கவேண்டும் ஒன்று தன்னை இறைவனின் அங்கமாக பார்ப்பது மற்றொன்று இறைவனில் இருந்து தன்னை தனித்து பார்ப்பது தனித்துப் பார்த்து சேவை செய்வது தனித்து பார்த்து சேவை செய்வது என்பது முதலில் இறைவனை ஒட்டுமொத்த சக்தியாக காணவேண்டும் அதாவது பிரம்மமாக காண வேண்டும் அந்த ஒட்டு மொத்த சக்தியில் தானும் ஓர் அங்கம் என்பதை உணர்தல் வேண்டும் அந்த பிரம்மத்தில் தான் ஒரு தனிப்பட்ட ஜீவன் என்பதை உணர்தல் வேண்டும் உணர்ந்த பின்பு அங்கமான நாம் தனி ஆத்ம நிலையிலிருந்து கொண்டு அந்தப் ஒட்டுமொத்த சக்தியான இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும் இந்த சேவையானது பிரபஞ்சத்திலிருந்து கொண்டு அந்த பிரபஞ்சத்திற்கு உதவி செய்தல் என்றும் கூறலாம் பிரபஞ்சத்தையே ஒரு பொருளாக பார்க்கின்ற பொழுது அல்லது பிரபஞ்சத்தையே ஏஒரு நபராக பார்க்கின்ற பொழுது நமக்கு ஒரு உண்மை புரியும் அந்த உண்மை நமக்குப் புரிந்ததா ஒவ்வொரு மனிதனும் நம்மில் ஒருவனாக தெரிவார் இந்த சமுதாயம் இந்த நாடு இந்த உலகம் எல்லாமே ஒன்றாக தோன்றும் ...