பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )


 மனிதனின் குணங்களை பறவைகளின் குணங்களோடு ஒப்பிட்டு செயல்படுத்தும் ஒரு கல்வி அறிவு ஆகும்


 இந்தப் பறவை கல்வியறிவு ஒவ்வொரு மனிதனின் நட்சத்திரங்களை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது


 இந்தப் பறவை சாஸ்திரம் அறிந்தவர்கள் யாரையும் ஈசியாக வெற்றி கொள்வார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியிருந்தார்கள்


பறவை அறிந்தவரை பகைத்துக் கொள்ளாதே என்று முன்னோர்கள் கூறுகின்ற வழக்கமும் உண்டு


 இந்த அறிவு மிக்கவர்கள் மறைமுக எதிரிகளை கூட வெல்லுகின்ற தன்மை உண்டு என்று கூறுகிறார்கள்


 இதை தவறுதலாக பயன்படுத்தக்கூடாது நல்ல காரியங்களுக்கும் நியாய தர்மங்களும் தான் பயன்படுத்த வேண்டும். 


இந்த பறவைகளைப் பற்றிய செயல்படு அறிவியல் என்பது அகத்திய முனிவர் தன்னை சார்ந்த சித்தர்களுக்கு விவரித்து உள்ளதாக கூறப்படுகிறது


அகத்திய முனிவருக்கு முருகக்கடவுள் உபதேசித்ததாக புராணம் கூறுகின்றது அந்த முருகக் கடவுளுக்கு அவருடைய தாயார் உபதேசித்ததாக புராணங்கள் கூறுகின்றன


 முருகக்கடவுள் அசுரர்களை அழிப்பதற்காக செல்கின்ற பொழுது தன் தாயாரான சக்தி தேவியிடம் ஆசிர்வாதம் வாங்குகின்ற பொழுது அவரது தாயார் அவருக்கு இந்த பறவை சார்ந்த சூழ்நிலையைப் பற்றி அதனால் ஏற்படுகின்ற பலன்களைப் பற்றியும் முருகக் கடவுளுக்கு விவரித்தது ஆக புராணங்கள் கூறுகின்றன


 ஐந்து பறவைகளை கொண்டு அதன் தன்மைகளை கொண்டு நம்முடைய செயல் எப்படி இருக்கும் என்று தீர்மானித்து கொள்கின்ற ஒரு முறை உள்ளது இந்த முறை இது சார்ந்த அறிவை ஐந்து பறவை கல்வி அல்லது பஞ்ச பட்சி சாஸ்திரம் என்கின்றோம்


 இந்த அறிவை கொண்டு நாம் செய்கின்ற செயலை செய்கின்ற பொழுது நடக்கின்ற நிகழ்வுகளை  வைத்து அதன் பலன்களை தெரிந்துகொள்வது என்று கூட கூறலாம்


 அதனால் இதனை வைத்து நமக்கு ஏற்றார் போல சூழ்நிலைகளை மாற்றிக்கொள்ளலாம் அல்லது நமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம்


 இது ஒரு ஆருடம் முறை பலன் கூறுதல் ஆகும்


 இந்த ஐந்து பறவைகளும் ஒவ்வொரு நாளும் 5 நிலைப்பட்ட செயல்களைச் செய்கின்றன அவற்றின் பலன்களும் அளவுகளும் நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது இவை பின்வரும் அட்டவணைகளில் விவரிக்கப்பட்டுள்ளது


அந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள காலநிலைக்கு ஏற்ப அந்த பறவை நிலை பாட்டுக்கு ஏற்ப பலன்களின் தன்மைகள் அளவுகளுக்கு ஏற்ப புரிந்து செயல்பட்டால் நம் செயல்களில் நிச்சயம் வெற்றி காணலாம்


இது ஒரு நம்பிக்கை சார்ந்த ஆருடம் முறை என்பதை நாம் மறந்து விடக்கூடாது


 இந்த சாஸ்திரத்தின் மூலம் மனதில் எண்ணிய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்


நோய்களை தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்


எதிரிகளை எதிர்ப்புகளை எப்படி கையாளுவது என்பதை புரிந்து கொள்ளலாம்


நமது கிரக தோஷங்கள் கான பரிகாரங்களை மேற்கொள்வது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்


சுபகாரியங்கள் செய்வதற்கான நேரங்களை தேர்வு செய்துகொள்ளலாம்


 இந்தப் பறவைகள் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.


 இந்த பலன் கணிக்கும் முறையானது வளர்பிறை தேய்பிறை மையமாகக்கொண்டு  கணிக்கின்ற ஒரு முறையாகும்


 அமாவாசையில் தொடங்கி பௌர்ணமி வரைக்கும் உள்ள திதியில் பிறந்தவர்கள் நட்சத்திர பறவை 


 அஸ்வினி பரணி கிருத்திகை ரோஹினி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்களது பறவை வல்லூறு ஆகும்



 திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பறவை ஆந்தை ஆகும்



உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தாள் காகம் ஆகும்



அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்திருந்தால் கோழி ஆகும்



திருவோணம் அவிட்டம் சதயம் புரட்டாதி உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்களில் பிறந்திருந்தால் மயில் ஆகும்



பௌர்ணமிக்குப் பின் இருந்து  அமாவாசைக்கு முன் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்கள் நட்சத்திர பறவை 


 திருவோணம் அவிட்டம் சதயம் புரட்டாதி உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வல்லூறு


 அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆந்தை


 உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காகம்


 திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோழி


 அஸ்வினி பரணி கிருத்திகை ரோஹினி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயில்


( பின்  வரும் அடடவனை பார்க்க்கவும் )


ஊண் அரசு நடக்கும் வேளைகளில் நாம் எடுக்கும் முயற்சிகள் நினைத்தபடி வெற்றி கிடைக்கும்


நடை நடக்கும் வேளைகளில் நாம் மேற்கொள்ளும் தொழில்களில் சற்று இழுபறி ஆகி பின்பு வெற்றிபெறும்


துயில் சாவு நடைபெறும் வேலைகளில் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும்


 இந்தப் பறவைகள் செயலிழந்து இருக்கும் நாட்களும் உண்டு


இந்த மாதிரி நாட்களில் முக்கியமான வேலைகள் வெளியூர் பயணங்கள் சுபகாரியங்களை மேற்கொள்ளுதல் புதியதாக ஏதேனும் செயல்களை மேற்கொள்ளுதல் மருத்துவரிடம் செல்லுதல் பொதுவாக நமக்கு தேவையான பயனுள்ள செயல்களை இந்த நாட்களில் செய்துகொள்ளலாம் நன்மையாக இருக்கும்


 தேய்பிறை திங்களில் வல்லூறு செயலிழந்து காணப்படும்


தேய்பிறை ஞாயிறு ஆந்தை செயலிழந்து காணப்படும்


தேய்பிறை புதன் வெள்ளி காகம் செயலிழந்து காணப்படும்


தேய்பிறை செவ்வாய் கோழி செயலிழந்து காணப்படும்


தேய்பிறை வியாழன் சனி மயில் செயலிழந்து காணப்படும்


 வளர்பிறை வியாழன் சனி வல்லூறு செயலிழந்து காணப்படும்


வளர்பிறை ஞாயிறு வெள்ளி ஆந்தை செயலிழந்து காணப்படும்


வளர்பிறை திங்கள் செயலிழந்து காணப்படும்


வளர்பிறை செவ்வாய் கோழி செயலிழந்து காணப்படும்


வளர்பிறை புதன் மயில் செயலிழந்து காணப்படும்


இந்த நாட்களில் பறவைகள் வலுப்பெற்று இருக்கின்ற பொழுது அந்த நாள் கால நிலைகள் பற்றி உங்களுக்கு சாதகமாக வேலை செய்யாது ஆகவே முதலில் நீங்கள் இந்த நாட்களை முடிவு செய்துகொள்ள வேண்டும் பிறகு அந்த கால் கட்டங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்


தேய்பிறை  -  மயில் :



 


Popular posts from this blog

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?