பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?


உலகம் முழுவதும் பாம்புகள் என்று எடுத்துக் கொண்டோமானால் 3000 முதல் 4000 வகையான பாம்புகள் இருப்பதாக கூறுகிறார்கள்


பொதுவாக இந்தியா மற்றும் தமிழ்நாடு என்று எடுத்துக் கொண்டோமானால் சராசரியாக 300 வகையான பாம்புகள் மட்டும்தான் இருப்பதாக கூறுகிறார்கள்


முக்கியமாக சில பாம்புகளைப் பற்றி மட்டும் நாம் தெரிந்து கொள்வோம் இவைகள் நம்முடன் அதிகம் வாழக்கூடியவை என்பதனால் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.



மொத்தமாக நாம் பாம்பை வகைப்படுத்தி பார்த்தோமானால் 10 சதவீதத்திற்கும் உட்பட்ட பாம்புகள் மட்டுமே விஷம் உள்ளவையாக இருக்கின்றன குறிப்பாகச் சொல்வதானால் அதிகபட்சம் 10 வகை பாம்புகள் விஷம் உள்ளவைகளாக  இருக்கின்றன.


அதிலும் அதிகம் விஷமுள்ளவை நாலு ஐந்து வகை பாம்புகள் மட்டுமே


இப் பாம்புகளில் சில மனிதனின் நரம்பு மண்டலத்தை தாக்கக் கூடிய தாகவும் மட்டும் இருக்கின்றன சில ரத்த மண்டலத்தை மட்டும் தாக்க கூடியவையாக இருக்கின்றன சில இரத்தம் மற்றும் நரம்பு மண்டலங்களை தாங்கக் கூடியவைகளாக இருக்கின்றன அவற்றை நாம் பார்க்கலாம்


பொதுவாக பாம்பு கடித்தால் அரசு மருத்துவமனைகள் இடையே தக்க மருத்துவ வசதி இருப்பதாக கூறுகிறார்கள் தனியார் மருத்துவமனை சென்றால் கவனம் அதிகம் தேவை மருத்துவ வசதிகள் இருக்கலாம் ஆனால் செலவினங்கள் மிக மிக அதிகமாக இருக்க வாய்ப்பும் அரசு மருத்துவமனையில் அந்த அளவுக்கு செலவினங்கள் இருக்க வாய்ப்பு இல்லை மருத்துவமும் கட்டாயமாக இருக்க வாய்ப்பு உண்டு அதனையும் மனதில் கொள்ளவும்


நல்ல பாம்பு



இந்தியாவை முக்கியமானது அதிகம் காணப்படக்கூடிய து தெய்வமாக மதிக்க தகுந்ததாகும் இருக்கின்ற நல்லபாம்பு அல்லது நாகப்பாம்பு இது அதிகம் விஷம் உள்ளது இது கடித்தால் மனிதர்கள் மரணம் நிச்சயம் தான் ஆனாலும் இந்த பாம்பு மனிதர்களை அதிகம் கடிப்பது இல்லை அதனிடம் ஏதாவது சீண்டினால் மட்டுமே அது கழிக்கின்ற குணம் உடையதாக இருக்கிறது சில நேரங்களில் இந்த நல்ல பாம்புகள் தங்கள் குட்டியுடன் அல்லது முட்டை பாதுகாக்கின்ற பொழுதோ அதன் அருகில் சென்றால் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு மற்றபடி இது மனிதர்களை கடிப்பது இல்லை


இந்தப் பாம்பு சராசரியாக 4முதல் 5 அடி இருக்கும். இரவு மற்றும் பகல் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடிய பாம்பு


கட்டுவிரியன் பாம்பு



இதுவும் நல்ல பாம்பை போன்றே விஷம் உடையது


விஷம் உடலில் ஏறியதும் நரம்பு மண்டலங்களை தாக்கக்கூடியது


பொதுவாக இந்தப் பாம்பு மாலை மட்டும் இரவில் மட்டும்தான் இரைதேடும் பகலில் வெளியே வராது


சாதாரணமாக இது மனிதர்களை கடிக்காது எதிர்பாராவிதமாக அதன்மீது நம் உடம்பு பட்டாலோ மிதித்தாலும் கடிக்க வாய்ப்பு உண்டு


இந்தப் பாம்பு கடித்தால் வலி அதிகம் தெரியாது ஆகையினால் வழியில்லை என்று கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது உடனடியாக மருத்துவமனை செய்ய வேண்டும்


கண்ணாடி விரியன் பாம்பு



பாம்பு கடித்து அதிகம் இறப்பவர்கள் இந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்


இந்தப் பாம்பின் அருகில் சென்றாள் நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு இந்த பாம்புகளிடம் விலகி இருப்பது நல்லது


இந்தப் பாம்பு கடித்தால் ரத்த மண்டலம் மட்டுமன்றி நரம்புமண்டலம் இரண்டையும் தாக்கக் கூடிய விஷம் இதன் விஷம்


இந்தப் பாம்பு மற்ற பாம்புகள் போல முட்டை இட்டு குஞ்சு பொரிப்பது இல்லை நேரடியாக குட்டிபோடும் பாம்பு இந்தியாவில் அதிகம் காணப்படும் பாம்பும் இந்த வகையைச் சார்ந்தது.


சுருட்டைவிரியன் பாம்பு



மிகவும் சிறிய பாம்பு 4,முதல் 5 அங்குலம் சராசரி நீளம் உடையது. இந்தப் பாம்பு கடித்தாலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சிறிய பாம்பு என்று அலட்சியம் செய்து விட முடியாது.


பாறைகள் உள்ள இடங்களில் இந்த வகை பாம்புகள் அதிகம் காணப்படும் சில பாரை சார்ந்த விவசாய நிலங்களிலும் இத்தகைய பாம்புகள் அரிதாக காணக் கூடியது


ராஜநாகம்



அதிக நீளமுடைய விஷப்பாம்பு இது இது 12 அடி சராசரியாக வளரக்கூடியது பாம்புகளை மட்டும் விரும்பி சாப்பிடக்கூடிய பாம்பு மலைக்காடுகளில் அதிகமாக மழை பெய்யக்கூடிய பகுதிகளில் இந்த வகை பாம்புகள் காணப்படுகின்றன மனிதர்கள் வாழும் பகுதியில் இத்தகைய பாம்புகள் காணக் கிடைப்பது மிகமிக அரிது அதிக நீளமுடைய பாம்பும் இந்த பாம்பு தான் அதிக விஷமுள்ள பாம்பு இந்த வகையைச் சார்ந்த பாம்பு தான் இது மனிதர்களை கடிப்பதே இல்லை அப்படி கடிப்பதும் பட்சத்தில் அது மிக அரிதாகவே நடக்கிறது இந்தியாவில் இந்தப் பாம்பு கடித்து இறந்தவர்கள் ஒருசிலரே என்று கூறப்படுகிறது


இதுவரை இந்தியாவில் இரண்டு பேர்தான் இறந்ததாக கூறுகிறார்கள் இதுக்கு மருத்துவமே கிடையாது கடித்த அரைமணி நேரத்தில் உயிர் பிரிந்துவிடும் என்று கூறுகிறார்கள் இதன் விஷம் நரம்பு மண்டலத்தை அதிவேகமாக தாக்கக்கூடியது இந்த வகை பாம்புகளின் விஷம் அதிகமாக இருப்பதனால் அதிக விஷம் உடம்பில் ஏற்றப்படும் குறுகிய நேரத்தில் உடல் முழுவதும் விஷம் பரவி விடுவதாலும் மரணம் நிச்சயம் ஆகிவிடுகிறது அதனால் மருத்துவத்தால் இதன் விஷத்தை செயலிழக்கச் செய்ய முடிவதில்லை


இது தவிர இந்தியாவில் காணப்படும் மற்ற பாம்புகள் விஷத்தன்மை மிகமிகக் குறைந்த இருக்கின்றன அவைகள் கடிப்பதனால் உயிருக்கு ஆபத்தும் வருவதில்லை சில உடம்புக்கு ஒத்துக்காது வகையில் சில பிரச்சனைகளை உருவாக்கலாமே தவிர உயிருக்கு ஆபத்து கொடுப்பதில்லை மற்ற வகை பாம்புகள்


விஷமில்லாத பாம்புகள்


பச்சைப் பாம்பு


செவிட்டு பாம்பு


மண்ணுளிப் பாம்பு


விவசாய பூமியில் அதிகம் காணப்படும் பாம்பு மண்ணை இந்தப் பாம்பு நன்கு பதப்படுத்துவது இதன் முக்கிய வேலையாக இருப்பதனால் அதனால்உழவர்களுக்கு அதிகம் நன்மை பயக்கும் இந்தப் பாம்பு இரவு நேரங்களில் வெளியே வரும் தவளை போன்ற பூச்சிகளை அதிகம் விரும்பி சாப்பிடக்கூடியது உள்ளேயிருக்கும் பூச்சிகளையும் மண்புழுவை சாப்பிடக்கூடிய பாம்பு இது


இந்தப் பாம்பு இருக்கும் மணல் பகுதி சிறந்த விவசாய பகுதியாக விளையக்கூடிய பகுதியாக இருக்கும் மனிதனுக்கு அதிகம் பயன்படும் இந்த பாம்பை வளர்ப்பது மிகவும் நன்மை தரும்.


மலைப்பாம்பு


இந்தப் பாம்பு தன்னுடைய அளவுக்கு உள்ள எந்த உயிரை வேண்டுமானாலும் உள்ளே விழுங்கி விடக்கூடிய தன்மை உடையது


சாரைப்பாம்பு


இந்தப் பாம்பு 12 அடி நீளம் வரை வளரக்கூடியது இந்தப் பாம்பு விவசாயிக்கு உதவி செய்யக் கூடியது விவசாய நிலங்களில் சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் இந்தப் பாம்பு மனிதனைக் கண்டால் மிகவும் பயன்படக்கூடியது அதிகம் நீளம் உடைய மனிதர்கள் வாழும் பகுதியில் வசிக்கக்கூடிய பாம்பும் இந்த வகையைச் சார்ந்ததே இதில் கருப்பை வகையும் உள்ளது இளமஞ்சள் இளஞ்சிவப்பு இந்த வண்ணத்தில் இந்த பாம்புகள் அதிகம் காணப்படும்


கடிக்கும் தன்மை உடையது அதுவும் நாம் தெரியாமல் மிதித்து விட்டாலோ அடித்துவிட்டால் கடிக்கும் தன்மை உடையது ஆனால் விஷம் கிடையாது


கொம்பேறி மூக்கன்


அதிகம் மரங்களிலே கிடைக்கக்கூடிய பாம்பு சிறிய அளவில் அதிகம் நீளம் உடைய பாம்பு இந்த வகை பாம்பு அதிக வேகமாக செல்லக்கூடிய பாம்பு இதுதான் மரங்களில் இலைகள் பூ கிளைகள் பாயும் தன்மை உடைய இந்த பாம்புகளை சிலர் பறக்கும் பாம்பு என்று கூறுவார்


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்