12 ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்
15 .11. 2020 அன்று இரவு 9 48 மணி அளவில் நடந்த குரு பெயர்ச்சி பற்றிய பலன் 12 ராசிக்கும்
மேஷ ராசி
இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் அதே நேரத்தில் தேவையற்ற விரயங்களும் ஏற்படும்
தொழில் மிக சிறப்பாக இருக்கும் திட்டமிட்டு செயல்பட்டால் செலவினங்கள் குறைந்தும் லாபம் மிகுந்தும் காணப்படும்
ரிஷப ராசி
பொதுவாக இவர் செய்கின்ற முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தருவதில் தாமதமாக இருக்கும் அதே நேரத்தில் இவர்களிடம் முயற்சியினால் லாபம் நிச்சயம் கிடைக்கும் எந்த செயலில் ஈடுபட்டாலும் கவனமாக செயல்படுங்கள் ஆபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்
மிதுன ராசி
பொதுவாக இவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் விலகிச் செல்வார்கள் அல்லது அவர்களால் தேவையற்ற மனக் கசப்புகளை சந்திப்பார். கணவன் மனைவி உறவு சற்று கசப்பு மிகுந்ததாகவே காணப்படும் செய்பவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய குரு பெயர்ச்சி
கடக ராசி
நண்பர்கள்தான் உறவினர்களிடம் குடும்பத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் இல்லையேல் தேவையற்ற கெட்ட பெயர்கள் வாங்க நேரிடும் .
தொழில் சார்ந்த விஷயங்களை பொருத்தமட்டில் நண்பர்களாலும் உறவினர்களாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்
சிம்ம ராசி
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பிரச்சனையாகவே இருப்பார்கள்
இந்தக் குரு பெயர்ச்சி இவர்களுக்கு நடக்க இருந்த கண்டங்கள் மற்றும் எதிர்பாராத பிரச்சனைகளை சுலபமாக மாற்றி நல்லதைச் செய்யும் அமைப்புகளை கொடுப்பார்
கன்னி ராசி
இவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகவும் யோகங்களைச் செய்யும் என்று சொல்லலாம் இவர்கள் மனதில் உள்ள ஆசைகள் எல்லாம் நிறைவேற்றி கொடுப்பார் இந்த குரூப்
நண்பர்கள் உறவினர்களால் எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும்
துலாம் ராசி
முடிந்தவரை இந்த குருபெயர்ச்சியில் அமைதியாக இருப்பது நல்ல பலனைத் தரும். உடல்சார்ந்த தேவையற்ற விரயங்கள் காணப்பட்டு மறையும்
விருச்சிக ராசி
இவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் நல்ல பலன்களை ஏற்படுத்தும்
குறிப்பாக குடும்பம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களால் எதிர்பாராத வருமானங்கள் ஏற்படும்
தனுசு ராசி
இந்த ராசிக்காரர்களுக்கு இது யோகமான குருபெயர்ச்சி என்று சொல்லலாம் பணமே குறிக்கோளாக செயல்பட்டு அதில் வெற்றியும் காண்பார்கள் சுகபோக செலவினங்களை செய்வார்கள்
மகர ராசி
சிறப்பான பலன்களைத் தருவார் என்று எதிர் பார்ப்பதை விட்டு விடுவது நல்லது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலனைத் தரும். சிலருக்கு எதிர்பாராத பெயர் புகழ் கிடைக்கும்
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது முடிந்தவரை விரயங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படாதீர்கள் முடிந்தவரை நல்ல செயல்களுக்கு சுபகாரியங்களுக்கு செலவு செய்யுங்கள்
மீன ராசி
இந்த குருப்பெயர்ச்சி இவர்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும் இவர்கள் செயல்கள் அனைத்தும் இவர்களுக்கு லாபத்தை தரும் பணமே குறிக்கோள் என்று வாழாதீர்கள் உங்கள் சிறப்பான செயல்திட்டங்கள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தரும்