சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள் பகுதி 2
வாக்கில் நின்ற சனி வாதம் செய்வான் இங்கே வாக்கு என்று சொல்வது ஒரு ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசி அதன் அடுத்த இடமான இரண்டாமிடம் இங்கே சனி இருக்கப் பெறின் அந்த ஜாதகன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக இருப்பார் பொய் பேசுபவன் ஆகவும் இருப்பான் ஆகவே அப்படிப்பட்டவர்கள் உடன் வாதம் செய்யாமல் இருப்பது நன்று
பொதுவாக நோய்களில் வாதம் நோய் இதற்கு சனி காரணமாக இருக்கிறார்
சனி திசை அல்லது சனி புத்தி காலங்களில் பயணங்களை மேற்கொள்வது சிறப்பாக இருப்பது இல்லை
பத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகன் இரும்பு சம்பந்தமான தொழில் செய்வார் அதில் சிறப்பாக வாழ்வான்
சனி கெட்டவன் உடன் கூட்டுத்தொழில் லாபம் தராது எந்த தொழில் செய்ய வேண்டுமானாலும் அதீத வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் அங்கு சனி சாதகமாக இருக்க வேண்டும்
சனியோடு ராகு சேர்ந்து இருக்குமானால் அச்சாதகன் பல தேசங்களுக்கு செல்லுவான்
பொதுவாக சனி ஆட்சி பெற்ற ஜாதகம் பெயர் புகழை அடைவான்
தென்கிழக்கு திசையை ஈசானிய மூலை என்று சொல்வார்கள் சனிமூலை என்றும் சொல்வார்கள் எந்த செயல்களை தொடங்கினாலும் சனி மூலையில் இருந்து தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு
கை கால் சரியாக தூய்மை செய்யாதவர்களை சனி பிடிக்கும் என்பார்கள் நோய் அவர்களை விடுவதில்லை
சனி உச்சம் பெற்ற சாதகர்கள் சாதனைகள் செய்வார்கள்
சனி ஆட்சி பெற்ற சாதகர்கள் புகழ் அடைவார்கள்
சனி நீச்சம் பெற்ற சாதகர்கள் வாழ்க்கையில் தடைகள் பலவற்றை சந்திப்பார்கள்
சனி பகை பெற்று சாதகர்கள் வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக இருக்கும்
சனி சம தன்மை பெற்ற ஜாதகர்கள் சராசரி வாழ்க்கை வாழ்பவராக இருக்கிறார்
சனி வேற்றுக்கிரக துடன் சேரும்பொழுது அதன் தன்மை குறைந்தே காணப்படுகிறது
ஏழாமிடத்தில் சனி இருக்குமானால் திருமண தாமதங்கள் ஏற்படும் தகாத சேர்க்கைகள் உண்டு
சனி பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலோ நல்ல பலன்கள் அமையும்
பொதுவாக கிரகங்களில் சூரியனுக்கு அடுத்து சனி பலம் வாய்ந்தவராக இருக்கிறார்
ஒருவருக்கு சனி கெட்டுப் போயிருக்கும் ஆனால் அவர்கள் மன அழுத்தம் உள்ளவர்களாக இருப்பார்கள்
சனி எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீடு ஆட்சி வீடாக இல்லாமல் இருந்தால் அல்லது உச்ச வீடாக இல்லாமல் இருந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் நல்லதாக இருக்காது
சனி லக்கனத்தில் ஒரு ராசியில் இருந்தால் அந்த ஜாதகர் தான் என்ற அகந்தை மிகுந்தவராக இருப்பார்
சனி இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பம் உறவுகள் சிறப்பாக இருப்பதில்லை
சனி மூன்றில் இருந்தால் சகோதரர்கள் ஒற்றுமை குறைந்து காணப்படும்
சனி 4ல் இருந்தால் முறைப்பெண் உறவு சிறப்பாக இருக்காது
சனி ஐந்தில் இருந்தால் ஆண் வாரிசு இருக்கும் அதற்கேற்ற பிரச்சனைகளும் இருக்கும்
சனி 6ல் இருந்தால் எதிரிகளால் பிரச்சனைகள் குறைந்து காணப்படும்
சனி ஏழில் இருந்தால் நட்பு நல்ல நட்பாக இருக்க வாய்ப்பில்லை
சனி எட்டில் இருந்தால் ஆயுள் சிறக்கும்
சனி 9ல் இருந்தால் முயற்சிகள் பலன் தராது பூர்வீக சொத்துக்கள் இழப்பு ஏற்படும்
சனி பத்தில் அமர்ந்தால் எதையாவது செய்து தொழிலில் மேன்மை அடைவான்
சனி பதினொன்றில் அமைய அதீத லாபம் பெறுபவராக இருப்பார்
சனி 12ல் இருந்தால் அவர் ஒரு நடுநிலைவாதி ஆக இருப்பார்