பகவான் விஷ்ணு கல்லாக மாறிய கதை

(புனிதமான சாலிகிராம கல்)



கண்டகி இவள் ஒரு தாசி குலப்பெண்


இவள் மிகவும் அழகாக இருப்பாள்


இவளிடம் ஒரு விசித்திரமான குணம் ஒன்று இருந்தது


இந்த தாசி குலப்பெண் தன்னிடம் வரும் ஆண்களிடம் ஒரு விலைமகள் போல் நடந்து கொள்வது இல்லை


தன்னை விரும்பும் ஆண்களிடம் அவர்களுக்கு உண்மையான மனைவி போல நடந்து கொள்வாள்


ஆண்கள் தன்னுடன் இருக்கும் வரை ஒரு உண்மையான மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே நடந்து கொள்வார்


தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். 


இதைப் பார்த்த ஊரார் என்றும் அவள் இனத்தைச் சார்ந்த உறவினர்களும் அவளை எள்ளி நகையாடினர். 


இருந்தாலும் அவள் தன் பத்தினி போன்று நடந்து கொள்ளும் குணத்தில் இருந்து மாறவில்லை. 


ஒருநாள் ஒரு வாலிபன் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு உடன் எந்த உறவும் கொள்ளாமல் சென்று விட்டான். 


அவனுடைய செயலைக் கண்டு வருந்திய கண்டகி செய்வதறியாது வேதனைப்பட்டார்


அதே வாலிபன் பிறகு மீண்டும் அவளிடம் திரும்ப வருகிறான். 


அந்த வாலிபனைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து 


உற்சாகத்துடன் அவனை உபசரித்தாள் கண்டகி 


அன்றிரவு அவனைத் தன் கணவனாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். 


அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க வைக்க ஆர்வமுடன் ஈடுபட்டாள்


அப்போது அவன் ஒரு குஷ்டரோகி எனத் அவளுக்கு தெரிய வருகிறது.


பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்


இருப்பினும் அவனைத் தன் கணவனாக ஏற்று பாதிக்கின்ற தன்னுடைய குணத்தை அவள் மாற்றிக் கொள்ளவில்லை


 அவள் அவனை வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய தேவைகளையும் செய்தான். 


உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்லி வற்புறுத்தினர் ஆனால் அவள் மறுத்தாள் 


கண்டகி  அன்றிரவை அவனுடன் எந்தவித வெறுப்புணர்வும் இன்றி அவருடன் மகிழ்ச்சியாக கழித்தாள் 


மறுநாள் விடிந்த பொழுது அவனை அன்புடன் அவனை எழுப்பினாள் கண்டகி. 


ஆனால் அந்த வாலிபன் உயிரோடு இல்லை.


இதைக் கண்டு வருந்திய கண்டகி, 


அவன் தன் கணவன் என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தாள் அப்போதைய காலத்தில் கணவன் இறந்தால் மனைவிகள் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது


இதை உணர்ந்த கண்டகி அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏற முடிவு செய்தாள்.


கண்டகி செய்கின்ற காரியத்தை அறிந்து தடுக்க முற்பட்டனர் 


ஆனால் அவள் தன் செயலில் இருந்து மாறவில்லை


திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம் என்ன ஒரு அதிசயம் நிகழ்ந்தது.


இறந்த வாலிபன் உடல் மறைந்தது


அங்கே சங்கு , சக்ர கதாபாணியான பகவான் விஷ்ணு காட்சியளித்தார்


கண்டகி விலை மகளாக இருந்தாலும் தன்னை விரும்பும் ஆண்களிடம் விலைமகள் போல் நடந்து கொள்ளாமல்


கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒவ்வொரு ஆணையும் அன்றைய பொழுது அவர்களை தன் கணவனாக பாவித்து உண்மையாக இருந்து வந்ததால் 


அதுவும் உண்மையான பத்தினித் தன்மை தான் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக தான் கண்டகி இடம் குஷ்டரோகி போல் வந்ததாக கூறினார் 


இவ்வாறு கூறிய பகவான் விஷ்ணு கண்டகி இடம் மூன்று வரங்கள் தருகிறேன் கேள் என்றார் . 


கண்டகி  ஒரே ஒரு வரம் மட்டும் தான் கேட்டாள். அதுவும் எப்போதும் பகவானாகிய தாங்கள் எனது  பக்கத்திலேயே தான் உங்களுக்குத் தாயாகவும் பகவானாகிய தாங்கள் எனக்கு மகனாகவும் இருக்க வேண்டும் என்று பணிவோடு வேண்டிக் கேட்டுக் கொண்டாள்


பகவானும் அப்படியே அவள் விருப்பம் போல தான் மலையாகவும் எப்போதும் தன்னுடனேயே இருக்கும் கண்டகி நதியாகவும் அவளை ஓடச் செய்தான் மட்டுமல்லாமல் அவளுடைய குழந்தை போல சாலிகிராம கற்களாக தன்னை பாவித்து வரமளித்தார்.


இன்றும் பகவான் மலையாகவும் கண்டகி அதே பெயரோடு  நதியாக ஓடுகிறாள். ஒரு மலர் மாலை போல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடும் கண்டகியின் நீர்  ஆகிய வயிற்றில்தான்  பலவித  ரூபத்தில்  விஷ்ணுவாகிய சாளக்கிராம கற்கள் கிடைகின்றது.


 


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?