சமாதி_நிலையில் உடலின் அறிகுறிகள்


 இந்த ஜட உலகில் சிறந்த மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் இறந்தே ஆகவேண்டும் 


இது தவிர்க்க முடியாத ஒன்று


அப்படி பிறக்கின்ற உயிரினங்களில் மனிதன் மட்டும் மாறு பட்டவனாக இருக்கின்றான்


இதில் மனிதன் மட்டும் அஷ்டாங்க யோகம் உடலை கட்டுப்படுத்தும் ஆற்றல் உயிரை உடலிலிருந்து  பிடிக்கின்ற கலை அறிந்திருக்கிறான்


இதனால் மனிதன் இறக்கின்ற பொழுது விலங்குகளிலிருந்து சிறிது மாறுபட்டதாக இருக்கின்றான்


பொதுவாக மனிதன்  இறக்கும்பொழுது  சிறுநீர் மற்றும் மலம் வெளிப்படுவது உண்டு 


மட்டுமன்றி உடல் நேரம் ஆக ஆக கெட்ட மணம் வீசுவது உண்டு 


அந்தப் பிணவாடை பல நோய்களை கொடுக்கக் கூடியதும் கூட


அதனால் அதனை உடனடியாக அவரவர் சமுதாய நம்பிக்கைப்படி 


புதைப்பதற்கு எரிப்பதற்கு ஆக வேண்டியதை செய்வார்கள்


ஆனால் அஷ்டாங்க முறைப்படி 


அல்லது யோக மார்க்கத்தில் உடலை ஒருநிலைப்படுத்தி


உணவு நீர் அருந்தாமல் காற்றிலே உயிர் வாழ்ந்து


பின்பு அந்த காற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 


உயிர் விடுபவர்களும் உண்டு அப்படி உயிர் விடுபவர்களை 


அந்த உயிர் விடும் நிலைதனை ஜீவசமாதி என்று சொல்வார்கள் 


அப்படி ஜீவசமாதி அடைந்தவர்களின் உடலைப் பற்றி


சில ரகசியங்கள் உண்டு 


அந்த உடலில் மலமும் ஜலமும் வெளியாகாது.


அந்த உடல் கணக்காது,ஒரு பூ கூடையை தூக்கினார் போல லேசாக இருக்கும்.


இந்த உடல் நேரம் ஆக ஆக அதில் வியர்வை கொட்டும்.


அந்த உடல் கெட்ட நாற்றம் வீசாது. 


அந்த உடல் விரைப்பாகாது.எவ்வளவு நேரம் ஆனாலும் வளைந்து கொடுக்கும். 


அதற்க்கு நாடி கட்டு, கால் கட்டு இட தேவையில்லை.


உடல் எப்பொழுதும் வெது வெது வென்று அதன் சூடு மாறாமல் இருக்கும்.


உடலின் தொண்டையோ எவ்வளவு தீர்த்தம் கொடுத்தாலும் அது தொண்டையின் வழியாக இறங்கும்


(பொதுவாக சாதாரண பிணத்தின் தொண்டை அடைபட்டுவிடும் )


உயிர் உள்ள பொழுது இந்த உடலில் இருந்த கூன் மேலும் பல கோளாறுகள் எல்லாம் அடக்கமானவுடன் அது நேராகிவிடும்.


பார்ப்பதற்கு இளமை தோற்றம் திரும்பிவிடும்.


80 வயதில் அடக்கம் ஆகும் ஒரு உடல் தோற்றம் 40 வயது உடலை போல் ஆகிவிடும்.


அடக்கமனவர்களின் முகம் இள சிரிப்புடன் காணப்படும். 


(பொதுவாக இறந்தவர்களின் உடலின் முகம் அரண்டு காணப்படும்.)


யோகா முறைப்படி ஆன்மாவை திரிப்பவர்கள் இறைவனின் உயர்ந்த நிலையை காண்பதனால் மகிழ்ச்சியுடன் முக தோற்றம் காணப்படும்


ஆனால் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் மரணத்தின்போது பயத்தில் இருப்பதால் அவர்களின் முகத்தோற்றமும் மிரட்சியுடன் காணப்படும்


Popular posts from this blog

பஞ்சபட்சி சாஸ்திரம் (ஐந்து பறவை பலன்  )

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள்

பாம்புகளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?